வாலாஜாபாத், :நிலத்தடி
நீராதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற, மாவட்ட
நிர்வாகம், உத்தரவு பிறப்பித்து உள்ளதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள், ஏரிகளிலுள்ள
சீமை கருவேல மரங்களை கணக்கெடுக்கும் பணியை துவக்கி
உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 942 பொதுப்பணி துறை ஏரிகளும்; 1,008 ஒன்றிய ஏரிகளும் என, மாவட்டம் முழுவதும், 1,950 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் கரைகளில், வேலி காத்தான் மரங்களும்; ஏரிகளுக்குள் சீமை கருவேலம், வெள்ளை கருவேலம் மரங்களும் முளைத்துள்ளன.சுற்றறிக்கை இந்த மரங்களால், கிராமப் பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என, நீர்மட்ட கணிப்பாளர்கள் கருத்து தெரிவித்து
வந்தனர். இதையடுத்து, கடந்த மே தினத்தில் நடந்த, சிறப்பு கிராம சபை கூட்டங்களில், ஏரிகளில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற, ஊராட்சி நிர்வாகங்களை, சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி, அனைத்து ஏரிகளில் உள்ள, சீமை கருவேல மரங்களை அகற்ற, ஊராட்சி நிர்வாகங்கள், சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றின. ஆனால், ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே மரங்களை அகற்றின. பெரும்பாலான ஊராட்சிகள் மரங்களை அகற்றும் பணியை துவக்கவில்லை என,
கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு, ஊராட்சிகளில் இருக்கும் பொதுப்பணி துறை மற்றும் ஒன்றிய ஏரிகளிலுள்ள சீமை கருவேல மரங்களை கணக்கெடுத்து, புள்ளி விவரத்தை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது.
தலைவர்களால்... மேலும், சீமை கருவேல மரங்கள் அகற்றுவதை, ஊராட்சிகள் அளவிலான, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும்
அறிவுறுத்தியது.இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, கிராம நிர்வாக
அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். விரைவில், ஊராட்சி தலைவர்கள் மூலமாக, மரங்களை அகற்றும் பணி துவக்கப்படும்' என்றார்.

No comments:
Post a Comment