வாசுதேவநல்லூரில்
கே. சுப்பிரமணியநாடார்-
வடிவு அம்மாள்
கல்வி அறக்கட்டளை
சார்பில் எஸ். தங்கப்பழம்
வேளாண்மைக் கல்லூரியின்
தொடக்க விழா
புதன்கிழமை நடைபெறுகிறது.
எஸ். தங்கப்பழம்
கல்வி நிறுவனங்களின்
தலைவர் தொழிலதிபர்
எஸ். தங்கப்பழம்
தலைமை வகிக்கிறார்.
திண்டுக்கல்
முதன்மை சார்பு
நீதிபதி கே. கருணாநிதி
முன்னிலை வகிக்கிறார்.
திண்டுக்கல் ஜி.டி.என்.
கலைக் கல்லூரி
முதன்மை செயல்
அலுவலர் க. ரத்தினம்
குத்துவிளக்கேற்றுகிறார்.
வேளாண்
விஞ்ஞானி எம்.எஸ்.
சுவாமிநாதன், கல்லூரியைத்
தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரி
நிர்வாகக் கட்டடத்தை,
நீதியரசர் கே. வெங்கட்ராமன்,
கல்லூரி முதல்வர்
அலுவலகத்தை வேளாண்மைத்
துறை இயக்குநர்
எம். ராஜேந்திரன்,
வகுப்பறைகளை மாநிலத்
திட்டக்குழு உறுப்பினர்
கே. ராமசாமி,
ஆய்வகங்களை வருமான
வரித்துறை ஆணையர்
எம். கிருஷ்ணசாமி,
விடுதிக் கட்டடங்களை
வேளாண்மைத் துறை
இணைச் செயலர்
சி. ராஜேந்திரன்,
தோட்டக் கலைத்
துறை இயக்குநர்
எல். சித்ரசேனன்
ஆகியோர் திறந்துவைக்கின்றனர்.
எஸ். தங்கப்பழம்
கல்வி நிறுவனங்களின்
தாளாளர் எஸ்.டி.
முருகேசன் வரவேற்கிறார்.
திருநெல்வேலி மனோன்மணீயம்
சுந்தரனார் பல்கலைக்
கழக பணிநிறைவு
முதுநிலைப் பதிவாளர்
ஜி. பாலகிருஷ்ணன்
நன்றி கூறுகிறார்.
No comments:
Post a Comment