கிருஷ்ணகிரி: பருவ மழை துவங்குவதால், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பங்கேற்ற சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் தலைமை வகித்து பேசியதாவது: தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், விதை கிராம திட்டம் மற்றும் ஆத்மா திட்டம் ஆகிய திட்டங்களை ஆய்வு செய்ததில், முழு சாதனை அடையவில்லை. அதனால் அனைத்து திட்டத்தையும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வேளாண் இயந்திரங்களான பவர் டில்லர், டிராக்டர், ரோட்டவேட்டர் ஆகியவற்றிற்கு உரிய பயனாளிகளை தேர்வு செய்து மின்னணுமுறை மூலம் விவசாயிக்கு நேரடியாக வங்கி மூலம் மானியத்தை வழங்க வேண்டும். மேலும் பருவ மழை தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகளை ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் சபாநடேசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment