தூத்துக்குடி,
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் அங்கமான மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி 3 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி வரவேற்றார்.
பயிற்சியில், மீன் பதன தொழில்நுட்ப துறை பேராசிரியர் வேலாயுதம், மீன் கழிவுகளை மறுசுழற்றி செய்து, உரமாக மாற்றும் முறை பற்றி பேசினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன், மீன் கழிவுகளை மறுசுழற்றி செய்வதன் முக்கியத்துவத்தையும், நல்ல உரம் தயார் செய்து, தோட்டப்பயிர்களுக்கும் மீன்வளர்ப்புக்கு பயன்படுத்துவது பற்றி பேசினார்.
இந்த பயிற்சியில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 27 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்களுக்கு மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கான பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியர் சா.ஆனந்த் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment