Tuesday, October 27, 2015

நாட்டுக் கோழிகளுக்கு தீவனம் தயாரிக்க இலவச பயிற்சி


நாட்டுக்கோழிகளில் முட்டை, இறைச்சி உற்பத்திக்கு சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்து ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இப் பயிற்சியில் நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், தீவன மேலாண்மை, முட்டை, இறைச்சி உற்பத்திக்குச் சொந்தமாக தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்த பயிற்சி விரிவாக அளிக்கப்படுகிறது.
இம் முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 - 266345, 266244 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு வரும் 31-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2015/10/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE/article3099619.ece

No comments:

Post a Comment