Thursday, October 29, 2015

விளைச்சலுக்கு தரமான விதைகளே அவசியம்:அதிகாரி தகவல்



திண்டுக்கல்:தமிழகத்தில் பருவ மழை துவங்கியுள்ளதால், இந்த பருவத்திற்கு ஏற்ற நல்ல மகசூல் தரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என விதைச் சான்று உதவி இயக்குநர் விஜயராணி கூறினார்.அவர் கூறியதாவது: பயிர்கள் நன்கு செழித்து வளர தரமான விதை அவசியம். விவசாயிகள் விதைகள் வாங்கும் போது ரகம் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றை சரிபார்த்து ரசீதுடன் வாங்க வேண்டும். அரசு கிட்டங்கிகளில் சான்று பெற்ற தரமான விதைகளை வாங்கலாம்.

அரசு விதைப் பண்ணை அமைக்க விரும்புவோர் வேளாண் விரிவாக்க மையத்திலும், தனியார் விதைப் பண்ணை அமைக்க விரும்புவர்கள் திண்டுக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்', என்றார். விதைச்சான்று அலுவலர் சின்னசாமி, "விவசாயிகள் விதைகள் வாங்கும் போது கடைகளில் விதைக்கான ரசீதை கேட்டு வாங்கவும்'' என்றார்.


No comments:

Post a Comment