Tuesday, October 6, 2015

தாவர உணவின் அவசியத்தை இளைஞர்களிடம் பரப்ப வேண்டும்_: அமைச்சர் பா.வளர்மதி வலியுறுத்தல்


உலக சைவ கவுன்சில் சார்பில்உலக சைவ தின விழாஎழும்பூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரங்கில் நேற்று நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி விழாவைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் ஏராளமான பள்ளி சிறார்கள் கலந்து கொண்டு ஆர்வமாக ஓவியம் வரைந்தனர். படம்: மு.முருகேஷ்
தாவர உணவின் அவசியத்தை இளைய சமுதாயத்தினரிடம் பரப்ப வேண்டும் என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வலியுறுத்தினார்.
உலக சைவ கவுன்சில் சார்பில் உலக சைவ தின விழா எழும்பூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:
தமிழக மக்கள் முன்பெல்லாம் கூழ், அரிசி உணவுகளை உண்டு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த னர். இப்போது நூடுல்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவை உடலுக்கு போதிய சத்தை தருவதில்லை. அத்துடன் உடல் நலனையும் கெடுக்கின்றன.
சைவ உணவான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த இவ் வுலகில் உங்கள் குழந்தைகளும் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களை ஊக்குவிப்பதோடு, நல்ல சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.
சத்து நிறைந்த தாவர உணவின் அவசியத்தை இளைய சமுதாயத்தினரிடம் பரப்ப வேண்டி யது அவசியமாகும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில், எஸ்.எம்.கே.ஜெயின் குரு சேவா சமிதியின் தலைவர் ஆர்.ஜே.ஆனந்த்முல் சலானி, ஹனு ரெட்டி ரியால்டி இந்தியா நிறுவன இயக்குநர் சுரேஷ் ரெட்டி சிர்லா, உலக சைவ கவுன்சில் தலைவர் தாராசந்த் துகார், இணைத் தலைவர் அமிரித் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி சென்னை யைச் சேர்ந்த பள்ளிக் குழந்தை களுக்கு ஓவியம், சுவரொட்டி எழுது தல், மாறுவேடம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7733228.ece

No comments:

Post a Comment