Monday, October 26, 2015

கோழிப் பண்ணைகள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு


அரியலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் . சரவணவேல் ராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் 5,000 கறிக்கோழி பண்ணைகள் 50% அரசு மானியத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பயன்பெறலாம். கடந்த 2012-13 ஆம் ஆண்டு 50 நபர்களுக்கு கோழி வளர்க்க ரூ. 1.03 கோடி மதிப்பிலும், 2013- 14 ஆம் ஆண்டு 25 நபர்களுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பிலும், 2014-15 ஆம் ஆண்டு 50 பேருக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கோழி வளர்ப்பை மேம்படுத்திட 50% மானியத்தில் கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
குறைந்த பட்சம் 5,000 கோழிக் குஞ்சுகளுக்கு, கோழிக்கு ஒரு சதுர அடி வீதம் 5,000 சதுர அடி பண்ணை கொட்டகை அமைக்க சதுர அடிக்கு ரூ. 200 வீதம் உத்தேச செலவீனம் ரூ. 10 லட்சமும், உபகரணங்களுக்கு ரூ. 75 ஆயிரமும் என ரூ. 10.75 லட்சம் மதிப்பீட்டுத் தொகையில் 25%அரசு மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை வங்கி கடனுதவியாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, அரியலூர் உதவி இயக்குநர்(94439 54958) உடையார் பாளையம் உதவி இயக்குநர்(94450 01207) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2015/10/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A/article3098050.ece

No comments:

Post a Comment