மழை அறிவிப்பு எதிரொலியாக மீனவர்கள் கடலில் மீன்
பிடிக்கச் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில்
2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில்
இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம்,
புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை
தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் திங்கள்கிழமை
முதல் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தமிழகம், புதுச்சேரி,
ஆந்திர மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர
மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment