மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு
இடங்களில் விதை எள் உற்பத்தி அறுவடை துவங்கப்பட்டுள்ளதால், ஓரிரு மாதங்களில் விவசாயிகளுக்கு,
மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மண்டல வேளாண் இயக்குனர்
திருமூர்த்தி கூறியதாவது: ஈரோடு அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கோபி, சத்தியமங்கலம்,
நம்பியூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விதை எள் உற்பத்தி தொடங்கபட்டது. 20 ஹெக்டேர்
பரப்பளவில் வெள்ளை எள், கருப்பு எள், செங்கூர் எள் என பயிரடப்பட்டு, தற்போது அறுவடை
துவங்கியுள்ளது. விதை உற்பத்திக்கு, 21 டன் இலக்கு நிர்ணயிக்கபட்டு, விசாயிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு, விதை விநியோகம்,
42 டன்னிற்கு மேல் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக, ஐந்து லட்சத்து 4 ஆயிரம்
ரூபாய் மானியம் வழங்க அரசு உத்திரவிட்டுள்ளது. விதை உற்பத்திக்கு கிலோவுக்கு ரூ.10ம்,
விவசாயிகளுக்கு எள் பெருக்கத்தை ஏற்படுத்த, ஒரு கிலோவுக்கு, ரூ.12 மானியம் தரப்படுகிறது.
எள் விதை அறுவடை செய்யப்படுவதால், வரும் விதைகளை பரிசோதனை செய்து, முளைப்பு திறன் கொண்டுள்ள
எள்ளை, ஜனவரி மாதத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு மண்டல வேளாண் இயக்குனர்
கூறியுள்ளார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=1374251
No comments:
Post a Comment