Thursday, October 29, 2015

மாடியில் அதிகரிக்கும் காய்கறி தோட்டம்


கூடலுார்: கூடலுார் அருகே, மாடி தோட்டத்தில், வீட்டுக்கு தேவையான காற்கறியை, இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது.
கூடலுார் பகுதிகளில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், தோட்டங்களில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வது கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது, இயற்கை விவசாயமும் மறைந்து, காய்கறி உற்பத்தியும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சில மாடிகள், இயற்கை காய்கறியை உற்பத்தி செய்யும் தோட்டங்களாக மாறி வருகின்றனர். குடும்ப தலைவிகள் பலர், விவசாயத்தில் ஆர்வத்துடன் களம் இறங்கி உள்ளனர். இதில், சளிவயல் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் காய்கறி தோட்டத்தை உருவாக்கி உள்ள, வல்சா கூறுகையில்,“வீட்டு தோட்டத்தில், முதன் முதலாக, பிளாஸ்டிக் பைகளில் பயிரிடப்பட்ட தக்காளி உள்ளிட்ட செடிகளில் அதிக மகசூல் கிடைத்து வருகிறது.
அடுத்த முயற்சியாக, காய்கறி தோட்டத்தை உருவாக்கி உள்ளோம். வீட்டில் உள்ள பெண்கள் முயற்சித்தால், ஓய்வு நேரத்தில் இம்முறையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய முடியும்,” என்றார்.



No comments:

Post a Comment