Monday, October 26, 2015

தேயிலை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்


குன்னுார்: குன்னுார் தேயிலை வாரியம் சார்பில், கொல்லிமலை ஓரநள்ளி கிராமத்தில் தேயிலை விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
வாரிய கூடுதல் செயல் இயக்குனர் பகலவன் வரவேற்றார். தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராஜ் தலைமை வகித்து, தேயிலையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். குறிப்பாக, 'தேயிலை விவசாயிகள் தரமான தேயிலையை பறிக்க வேண்டும்; 'சில்வர் டீ' தயாரிக்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டன. முகாமில், தேயிலைவாரிய வளர்ச்சி அலுவலர் செல்வி பிரபா, உபாசி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் ராமமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செல்வராஜ் உட்பட பலர் பேசினர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment