மக்காச்சோளம்
சாகுபடி குறித்த ஒரு நாள் வயல்வெளிப் பயிற்சி செல்லம்பட்டி வட்டம் பூச்சம்பட்டி கிராமத்தில்
நடைபெற்றது.
மதுரை
வேளாண்மைக் கல்லூரியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம்சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு
அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.வீரபுத்திரன் தலைமை வகித்தார். மக்காச்சோளம் சாகுபடியில்
விதைப்பு, உரம், நீர், மற்றும் களை நிர்வாகம் உள்ளிட்ட உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து
அவர் விளக்கம் அளித்தார்.
உதவிப்பேராசிரியர்
(பூச்சியல்) பா. உமாராணி, மக்காச்சோளத்தை தாக்கும் முக்கிய பூச்சிகளையும் அவற்றைக்
கட்டுப்படுத்தும் முறைகளையும் எடுத்துரைத்தார். மக்காச்சோளத்தில் நோய் மேலாண்மை பற்றிய
தொழில்நுட்பத்தினை உதவிப்பேராசிரியர் (நோயியல்) க.மனோன்மணி விளக்கிக் கூறினார். ஆராய்ச்சியாளர்கள்
அருண்குமார் மற்றும் சி. கருணைதாசன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
சுமார் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment