மீனவர்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: மாவட்ட மீனவர்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியரகத்தில் அக்டோபர்
30-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் சில நிர்வாக காரணங்களுக்காக
31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குறைகேட்புக்
கூட்டரங்கில் இக்கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்டத்திலுள்ள அனைத்துத்
துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்பதால் மாவட்டத்துக்கு உள்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு
தங்களது குறைகளைத் தெரிவித்து, அதற்கான தீர்வைப் பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment