நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் நவம்பர் 3-ஆம் தேதி வேளாண் காடுகளுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன்
வெளியிட்ட செய்தி: இப் பயிற்சி முகாமில், வேளாண் காடுகளின் முக்கியத்துவம், வகைகள்,
வேளாண் காடுகளில் வளர்க்கக்கூடிய வணிக ரீதியான மர வகைகள், தீவன மரங்கள், பழ மரங்கள்,
தீவனப் பயிர்கள் சாகுபடி இவற்றுடன் கால்நடைகளை ஒருங்கிணைத்தல் குறித்த விரிவான பயிற்சி
அளிக்கப்படும். மேலும், மர வகைகளில் நாற்று உற்பத்தி குறித்த செயல்விளக்கப் பயிற்சியும்
அளிக்கப்படும். இப் பயிற்சி முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள்,
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு
நேரிலோ அல்லது 04286 - 266345, 266244 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ வரும் நவம்பர்
2-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment