Monday, October 26, 2015

மானியத்தில் வழங்க 30,000 தென்னங்கன்று தயார்


ஈரோடு: தமிழகத்தில், தென்னை மரங்கள் அதிகம் உள்ள பகுதியில், ஈரோடு மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. மாவட்டத்தில், 13 ஆயிரம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை வளர்ப்பை ஊக்குவிக்க, அரசு சார்பில் மானிய விலையில் தென்னங்கன்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கு, ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 30 ஆயிரம் தென்னங்கன்று தயாராக உள்ளது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திருமூர்த்தி கூறியதாவது: 15 ஆயிரம் நெட்டை தென்னங்கன்று, 15 ஆயிரம் நெட்டை-குட்டை தென்னங்கன்று, இப்போது தயார் நிலையில் உள்ளது. கடந்தாண்டு, நெட்டை கன்றுக்கு, ரூ.7.50, நெட்டை - குட்டை கன்றுக்கு, ரூ.15 மானியமாக வழங்கப்பட்டது. நடப்பாண்டு, ஒவ்வொரு நெட்டை கன்றும், 15 ரூபாய் மானியத்திலும், நெட்டை - குட்டை கன்று, 25 ரூபாய் மானியத்திலும் வழங்கப்படுகிறது. இதுவரை, ஏழாயிரம் கன்று தரப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment