சென்னை,:பழங்கள், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை சாயங்களுடன் கூடிய, 'ஆர்கானிக்
பெங்கால்' காட்டன் சேலைகள் கண்காட்சி, சென்னை, சங்கரா ஹாலில் துவங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநில நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியில், அம்மாநில அரசு உதவியுடன், 'ரங் மகால்' என்ற நெசவாளர் அமைப்பு செயல்படுகிறது.
இந்த அமைப்பு, நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில், ஆர்கானிக் பெங்கால் காட்டன் சேலைகள் கண்காட்சியை துவக்கியுள்ளது.
கண்காட்சி குறித்து, ரங் மகால் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:பழங்கள், காய்கறிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை சாயங்களுடன் கூடிய, ஆர்கானிக் பெங்கால் காட்டன் சேலைகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 250 நெசவாளர்களின் கைவண்ணத்தில், 250 ரகங்களில் உருவான, 5,000 சேலைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, 'ஜல்சூரிஸ்' சேலைகள், மேற்கு வங்கத்தில் பிரபலமான, 'தாங்கைல் நக் ஷி பார்டர்' சேலைகள், 'ஜம்தானிஸ்' சேலைகள், கைவேலைப்பாடு, எம்ராய்டிங், இயற்கை சாய கைத்தறி சேலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குறைந்தபட்சம், 680 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நவ., 8 வரை கண்காட்சி நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment