தடைசெய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்தாமல் கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என ஆட்சியர் சு. கணேஷ் அறிவுறுத்தினார்.
புதுகை மாவட்டம், மணமேல்குடியில் புதன்கிழமை மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற மீனவர்கள் குறைகேட்பு முகாமில் அவர் மேலும் பேசியது: மீனவர்களின் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், மணமேல்குடி ஒன்றியம், கிருஷ்ணாஜிபட்டினம், கீழமஞ்சக்குடி கிராமத்தில் ரூ.30
லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொடிக்குளம் கிராமத்தில் ரூ. 10.5 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தாமல் கடல் வளத்தைப் பாதுகாக்க முன் வர வேண்டும் என்றார் ஆட்சியர். இக்கூட்டத்தில் மீன்வளத்துறையின் சார்பில் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ. 50 ஆயிரமும், இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 10 பேருக்கும் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ. 7.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இதில், வருவாய் கோட்டாட்சியர் ரா.
ரம்யாதேவி, வட்டாட்சியர் அன்பையன், மணமேல்குடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சின்னக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment