Tuesday, October 13, 2015

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்; வானிலை அதிகாரி தகவல்



சென்னை, 

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20-ந்தேதி அல்லது அதற்கு சில நாட்கள் முன்பாக அல்லது சில நாட்கள் பின்பாக தொடங்கும். அவ்வாறு வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது. 

இந்தநிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி நேற்று கூறியதாவது:-

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வடகிழக்கு பருவமழை 3 நாட்களுக்குள் தொடங்குவதற்கான அறிகுறி இல்லை. தென் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும். வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். நாளை (புதன்கிழமை) தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும்.

இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். 

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு வருமாறு:-

வேம்பாவூர், தஞ்சை தலா 14 செ.மீ., சத்திரப்பட்டி, சோழவந்தான் தலா 13 செ.மீ., துறையூர் 12 செ.மீ., மங்களாபுரம் 11 செ.மீ., ஏற்காடு, விராலிமலை தலா 10 செ.மீ., கோபிச்செட்டிப்பாளையம், வாழப்பாடி, மேல்அணைக்கட்டு, திருப்பூர் தலா 9 செ.மீ., செந்துறை 8 செ.மீ., ஒசூர், சேலம், பேரையூர், பாலக்கோடு, தஞ்சைமாவட்டம் பாபநாசம், திருக்கோவிலூர் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 100 இடங்களில் மழை அளவு பதிவாகி உள்ளது

No comments:

Post a Comment