தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக். 15 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர்கள், பாசன சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment