Tuesday, October 13, 2015

நெற்பயிரில் புகையான் நோய்த் தாக்குதல்:வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய்த் தாக்கிய நெல் பயிர்களை வேளாண் அலுவலர்கள், விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பையூரில் உள்ள கோவை வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 10,700 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் வட்டாரங்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் (வேளாண்மை) நேர்முக உதவியாளர் சுமதி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ரவீந்தர், பையூரில் உள்ள கோவை வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஜலாலுதீன், உதவிப் பேராசிரியர்கள் ஆனந்த், திலகம் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மலையாண்டஅள்ளி, மலை சந்து ஆகிய கிராமங்களில் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை ஆய்வு செய்ததில் பயிரில் புகையான் நோய்த் தாக்குதல் ஆரம்ப நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நோய்க் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், பூச்சி மருந்துகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment