Friday, October 2, 2015

கால்நடை மருத்துவ முகாம்


உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் ஊரகவியல் துறை கால்நடை மருத்துவமனை மற்றும் கருமாத்தூர் அரசு கால்நடை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கால்நடை மருத்துவ முகாம் கிராம்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இம்முகாமில் விவசாய சங்க தலைவர் எம்.மணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பேசில் சேவியர் முகாமினை துவக்கி வைத்துப் பேசினார். ஊரகவியல் துறைத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வைத்து பேசினார். புள்ளநேரி ஊராட்சி மன்ற தலைவர் பசுபதி தங்கராஜ், கண்ணனூர் ஒன்றிய கவுன்சிலர் தேவராஜ் வாழ்த்துரை வழங்கினர்.
 கால்நடை மருத்துவர்கள் எஸ்.பி.மலர்கண்ணன் மற்றும் பி.ரவிச்சந்திரன் ஆகியோர்  372 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் மரிய ஜோசப் மகாலிங்கம், உதவிப் பேராசிரியர்கள் பாண்டீஸ்வரி, ஜேம்ஸ் வசந்த், ஜான்சி ராமன், கே.முனியாண்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/10/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article3060632.ece

No comments:

Post a Comment