Friday, October 2, 2015

"நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும்'


திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் விவசாய நெல் சாகுபடி பணிக்கு நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என்று வேளாண்மை இணை இயக்குநர் முருகவேல் தெரிவித்தார்.
திருவள்ளூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பணிக்குச் சென்று விடுவதால் நெல் சாகுபடி பணிக்கு ஆள்பற்றாக்குறை நிலவுகிறது.
மேலும், விவசாயத்தில் கூலி பற்றாக்குறையால் இளைஞர்கள் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட வேலைகளுக்காக வெளியூர்களுக்குச் சென்று விடுகின்றனர்.
இதனால் நெல் நடவுக்கு ஆள்பற்றாக் குறை நிலவுகிறது. இதைப் போக்க நெல் நடவு இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநர் முருகவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடவு இயந்திரங்கள் ஈக்காடு, கிளாம்பாக்கம், பாக்கம், விஷ்ணுவாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு மையங்களில் வாடகைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 1,400- வாடகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment