தேவதானப்பட்டி : வைகை அணை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில்
கரும்பு விவசாயிகளுக்கு இரண்டு நாள் வயல்வெளி பயிற்சி நடந்தது.பெரியகுளம், ஜெயமங்கலம்,
ஆண்டிபட்டி, போடி ஆகிய கரும்பு கோட்டங்களை சேர்ந்த 40 கரும்பு விவசாயிகளுக்கு வைகை
அணை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் இரண்டு நாள் வயல்வெளி பயிற்சி முகாம் நடந்தது.
முதல் நாள் பயிற்சியில் கரும்பு மகசூலை அதிகரிப்பது, செலவினங்களை குறைப்பதற்கு உழவியல்
முறைகள், திசுவளர்ப்பு, பரு செதில் நாற்று உற்பத்தி, இயந்திரங்களின் பயன்பாடு, சொட்டு
நீர் பாசன முறை மற்றும் பராமரிப்பு நுண்ணுயிர் உரங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்
அவற்றின் கட்டுப்பாடு, பயோ காம்போஸ்ட் பயன்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம்
நாள் வயல்வெளி பயிற்சியின் போது ஜெயமங்கலம், மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, தாமரைக்குளம்
கிராமங்களில் சாகுபடி செய்துள்ள உயர்விளைச்சல் தரும் கரும்பு ரகங்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.
ஆலை வளாகம், மண் பரிசோதனை ஆய்வகம், நுண்ணுயிர் உரங்கள் ஆய்வகம், உயிரியல் முறை மூச்சிக்கட்டுப்பாட்டு
ஆய்வகம், பயோ காம்போஸ்ட் உற்பத்தி கூடம் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர்.ஏக்கருக்கு
70 டன் கரும்பு உற்பத்தி செய்த தேவதானப்பட்டி விவசாயி வீரணன் வயல்வெளி பயிற்சிக்கு
வந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment