Sunday, October 4, 2015

விவசாயிகளுக்கு மரக்கன்று இலவசமாக வழங்கல்


சேலம்: சேலம் பசுமை பாதுகாப்பகம், கடந்த, 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 90 லட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நட்டு பராமரித்து வருகிறது. இந்நிலையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பசுமை பாதுகாப்பக அலுவலகத்தில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, 5,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு செம்மரம், தேக்கு, மகிலம், மலைவேம்பு, வேம்பு, புங்கன், அரசன் போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பசுமை பாதுகாப்பக நிறுவனர் பாலாஜி விவசாயிகளுக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment