Monday, October 12, 2015

கோழிகளுக்கு குடல் புண் நோய் ஏற்பட வாய்ப்பு: தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


கோழிகளுக்கு குடல் புண் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த 4 நாள்களுக்கு பொதுவாக மேகமூட்டமும் மழையும் கூடிய வானிலை நிலவும் என்பதால் வெப்பநிலை குறைந்த அளவுகளில் நிலவும். கோழிகளில் தீவன எடுப்பு உயர்ந்து காணப்படும். முட்டை உற்பத்தி இயல்பாக இருக்கும்.
 புதிய வரவு சோயா பிண்ணாக்கில் அதிக அளவு ஈரப்பதம் கண்டறியப்படுகிறது. எனவே அதன் கொள்முதல் தரத்திலும் பயன்பாடு மற்றும் சேமிப்பு முறையிலும் மிகுந்த கவனம் தேவை. மேலும் விலையேற்றம் காரணமாக தரம் குறைந்த சோயா பிண்ணாக்கு வரவுக்கும் வாய்ப்பு உள்ளதால் அவற்றைக் கொள்முதல் செய்யும்போது கவனம் வேண்டும்.
 கடந்த வாரம் கோழியின கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும், ஈகோலை கிருமி மற்றும் சளி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்து உள்ளது.
 இதனைக் குறைக்க பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மற்றும் குடிநீரில் ஈகோலை கிருமியின் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் கிருமி நாசினிகளை உபயோகிக்க வேண்டும்.
 பருவமழை பெய்து வருவதால் கோழிப்பண்ணைகளில் ஏற்படும் ரத்தக் கழிச்சல் மற்றும் குடல் புண் நோய்களுக்கு எதிரான தடுப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.


http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2015/10/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-/article3074113.ece

No comments:

Post a Comment