Monday, October 12, 2015

20இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக். 20ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாதம்தோறும் விவசாயிகள் கோரிக்கைகளை கேட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, அக்டோபர் மாதத்துக்கான கூட்டம் வரும் 20ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுகிறது.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து செப்டம்பர் மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் நேரில் பதில் அளிக்கப்படும்.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2015/10/11/20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3073234.ece

No comments:

Post a Comment