வேளாண் ஆலோசனை மற்றும் வணிக மையம் அமைக்க வேளாண் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கடலூர் வேளாண் இணை இயக்குநர் த.தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் உடனுக்குடன் கிடைத்திட வழிசெய்யும் வகையில், மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வேளாண் ஆலோசனை மற்றும் வணிக மையங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மையங்கள் வேளாண் பட்டதாரிகளைக் கொண்டு நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையங்களை மேலும் நிறுவிட ஹைதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பயிற்சி மையங்களில் பயின்று சான்று பெற்ற வேளாண் பட்டதாரிகளிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் திட்டக் கருத்துருவினை தயாரித்து உடனடியாக அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சமர்ப்பித்து, வங்கிக் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இதற்கு தேசிய விவசாய மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் அல்லது கடலூர் நபார்டு உதவிப் பொது மேலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment