ராமநாதபுரம்,:ராமநாதபுரம்,
துாத்துக்குடியில் கடல்வாழ் உயிரின மெகா கண்காட்சி அக்டோபரில் நடக்கிறது.மன்னார் வளைகுடா
உயிர்க்கோள காப்பகம் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ளது. இந்த பகுதியில்
3,600 அரிய வகை கடல்வாழ் உரினங்கள் உள்ளன. அழிந்துவரும் கடல் பசு, ஆவுலியா, அலுங்காமை,
ஓங்கிகள், பெருந்தலை ஆமை, பால் சுறா, கங்கை சுறா, வேளாமீன், வெள்ளசுறா, சவுக்கு திருக்கை,
கடல் அட்டைகள், கடல் பஞ்சு உள்ளிட்ட 54 இனங்கள் பாதுகாக்க வேண்டியவையாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
இதனை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இந்தஅமைப்பு கடல்வாழ் உயிரினங்கள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மெகா கண்காட்சி நடத்த உள்ளது.
இந்த கண்காட்சி ராமநாதபுரம் முகமதுசதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அக்., 7 முதல் அக்., 9 வரையும், துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் அக்., 13 முதல் அக்., 15 வரையும் நடக்கின்றன.
அறக்கட்டளை இயக்குனர் டாங்கே கூறியதாவது: கண்காட்சியில் கடல்வாழ் உயிரினங்களை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விளக்கப்படும்.
பதப்படுத்தப்பட்ட உயிரின மாதிரிகள் வைக்கப்படும். கடல்நீரில் உயிருள்ள மீன்கள் இருப்பது போன்ற அமைப்பும் உருவாக்கப்படும். அனைவரும் எந்தவித கட்டணமின்றி கண்டுகளிக்கலாம், என்றார்.

No comments:
Post a Comment