Thursday, October 1, 2015

நெல்லுக்கு புதிய கொள்முதல் விலை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது



சென்னை:நெல்லுக்கான ஆதார விலையை, தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய கொள்முதல் விலை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையுடன், கூடுதலாக ஊக்கத் தொகையை, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.
நடப்பு, 'காரீப்' பருவத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு, சமீபத்தில்
 
அறிவித்தது. அதன்படி, சன்ன ரக நெல், ஒரு குவிண்டாலுக்கு, 1,450 ரூபாய்; சாதாரண ரக நெல், ஒரு குவிண்டாலுக்கு, 1,410 ரூபாய் என, மத்திய அரசு, ஆதார விலையை நிர்ணயித்துள்ளது.
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, சாதாரண நெல், ஒரு குவிண்டாலுக்கு, 50 ரூபாய்; சன்ன ரக நெல், ஒரு குவிண்டாலுக்கு, 70 ரூபாய் கூடுதலாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எனவே, ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,460 ரூபாய்; சன்ன ரக நெல்லுக்கு, 1,520 ரூபாய் வழங்கப்படும். இப்புதிய கொள்முதல் விலை, இன்று முதல் நடை
முறைக்கு வருகிறது.



குவிண்டாலுக்குரூ.2,000 தேவை!

உற்பத்தி செலவு உயர்ந்து விட்டது; மின் தட்டுப்பாடு நீடிக்கிறது; பருவ மழை இல்லை; நிலத்தடி நீர் குறைந்துள்ளது; விவசாய தொழிலாளர் கூலி அதிகரித்துஉள்ளது. இதையெல்லாம் மீறித்தான், விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஆனால், சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாய்; சன்ன ரக நெல்லுக்கு, 70 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.குறுவை அறுவடை நெல், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு விட்டது. இனி, ஜனவரியில் தான், நெல் கொள்முதல் துவங்கும். 'அக்டோபர் முதல், புதிய
 
கொள்முதல் விலை அமலுக்கு வரும்' என, அரசு அறிவித்துள்ளது.இதை முன்கூட்டியே அறிவித்திருந்தால், விவசாயிகள் பயன் பெற்றிருப்பர். ஜனவரி யில் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் நிர்ணயம் செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு
 
கட்டுப்படியாகும்.- விருத்தகிரி, பொதுச்செயலர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு.


ஒரு ஏக்கருக்குரூ.20,000 செலவு!

ஒரு ஏக்கரில் விதைக்க, 30 கிலோ விதை நெல், 1,000 ரூபாய்க்கு மேல் விற்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து விலை, லிட்டருக்கு, 500 ரூபாய் உயர்ந்துள்ளது. விவசாயிகள் கூலி, 100 ரூபாய் அதிகரித்துள்ளது.
 
அறுவடை இயந்திர வாடகை, 2,500 ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கணக்குப்படி ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.அறுவடை செய்த நெல், கொள்முதல் மையத்துக்கு செல்ல, வாகன வாடகை; ஏற்ற, இறக்க கூலி; கமிஷன் உட்பட, 1,000 ரூபாய்க்கு மேல் செலவிட நேரிடு
கிறது. எனவே, ஊக்கத் தொகை போதுமான அளவில் இல்லை. குவிண்டாலுக்கு, 500 ரூபாய் கூடுதலாக அறிவித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும்.
இந்தப் பணத்தை, மத்திய அரசிடம் கேட்டு, வாங்கித் தர வேண்டும். முடியாத பட்சத்தில், மாநில அரசே வழங்க வேண்டும்.- விநாயக மூர்த்தி, தலைவர்,
 
கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் சங்கம்.

No comments:

Post a Comment