Wednesday, October 14, 2015

கறவை மாடு வாங்க கடன் அளிப்பு



தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில், விவசாயச் சங்க உறுப்பினர்களுக்கு கறவை மாடு வாங்குவதற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி தரடாப்பட்டை அடுத்த கன்னக்கந்தலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் 41 பேருக்கு தலா ரூ. 25,000 வீதம் மொத்தம் ரூ. 10,25,000 ஆயிரம் ரூபாய்க்கு கறவை மாடுகளுக்கு கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவர் டி.ஜானகிராமன், கூட்டுறவு சங்கத் தலைவர் வித்யா தேவேந்திரன், கால்நடை மருத்துவக் குழுவினர், கூட்டுறவுக் கடன் சங்கச் செயலாளர் ஜி.காளிதாஸ், காசாளர் கே.காமராஜ், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.லோகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ஆர். நடராஜன், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் என்.வேல்முருகன், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment