ஆனைமலை
சம்பா பருவ நெல் சாகுபடியில் அதிக லாபம் பெறுவது எப்படி? என்று வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல் அறுவடை
ஆனைமலை வட்டாரத்தில் வேளாண்மை பிரதான தொழிலாக உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் குறுவை, சம்பா என இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குறுவை அறுவடையை முடித்த விவசாயிகள் சம்பா பருவத்துக்கான ஆயத்த பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் விவசாயிகள் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு பாய் நாற்றங்கால்முறையில் நெல் நாற்றுகள் தயாரிக்க வேண்டும். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நாற்றுகள் உற்பத்தி
ஆனைமலை வட்டாரத்தில் பெத்தநாயக்கனூர் பகுதியில் சம்பா நெல் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார், வேளாண்மை அலுவலர் மைதிலி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சகாப்தீன், செல்வகுமார், ஜாபர்அலி, பூபதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டார பகுதியில் தான் குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. நடப்பு சம்பா பருவத்துக்கு விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 750 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தலா ரூ.1,200 மானியம் வழங்கப்பட உள்ளது.
குறைந்த விதை நெல், அதிக தூர்கள், குறைந்த களை, சீரான இடைவெளி, நிறைந்த மகசூல் உள்பட பல்வேறு அம்சங்கள் நிறைந்த எந்திர நடவு முறையை விவசாயிகள் பின்பற்றினால் சம்பா பருவத்தில் அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment