சரியான அளவு புரதம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் புரதச்சத்து நிறைந்த வெவ்வேறு விதமான உணவுகளை உண்பதால் நம் ஆரோக்கியம் எந்த அளவுக்கு மேம்படும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் ஏங்க்லியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
இதற்கு முந்தைய ஆய்வுகளின் முடிவுகள் அதிக புரதம் உண்பதால் ரத்த அழுத்தம் குறைவதற்கான ஆதாரங்களை முன்வைத்தன என்கிறார் இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் ஏமி ஜென்னிங்ஸ். ஆனால், விலங்கு மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதங்களில் எது மிகவும் நன்மையானது என்பதைக் கண்டறிய இறைச்சி மற்றும் காய்கறிகளில் உள்ள ஆர்ஜினின், சிஸ்டீன், க்ளுட்டாமிக் ஆசிட், கிளைசீன், ஹிஸ்டிடீன் லியுசீன் மற்றும் டைரோசீன் ஆகிய ஏழு வெவ்வேறு அமினோஅமிலங்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான எடையுள்ள பெண்களின் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்தது ஆய்வாளர் ஜென்னிங்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழு.
மேற்குறிப்பிட்டுள்ள அமினோஅமிலங்களை அதிக அளவில் உட்கொண்டவர்களின் ரத்த அழுத்தமும், தமனியிலுள்ள இறுக்கத்தன்மையும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2000 பெண்கள் பங்குபெற்ற இந்த ஆய்வின் முடிவுகள் 'தி ஜர்னல் ஆப் நியூட்ரிஷன்' என்னும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்விதழில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள மிகவும் ஆச்சரியத்தக்க உண்மை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட 7 அமினோ அமிலங் களை உட்கொள்வதால் ஒருவருடைய ரத்த அழுத்தம் மற்றும் தமனியின் இறுக்கத்தன்மையில் ஏற்படும் நல்ல மாற்றமானது புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை விடுவதால் ஏற்படும் மாற்றத்திற்கு நிகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், உயிரைக்கொல்லும் ஸ்ட்ரோக் அல்லது இதர இதயக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அதிக ரத்த அழுத்தத்தை, தாவர மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும், குறிப்பிட்ட 7 அமினோ அமிலங்கள் கொண்ட, அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகள் மூலமாக குறைத்து மிகவும் சுலபமாக நீண்ட நாள் வாழமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதானே!

http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/10/05124437/Heart-Health-Protein-foods-help.vpf
No comments:
Post a Comment