Monday, October 5, 2015

சூரிய ஒளி உலர்த்தி அமைக்க விருப்பமா?


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், சூரிய ஒளி உலர்த்தி எனப்படும் சோலார் டிரையர், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட தோட்ட பயிர்களும், துளசி போன்ற மூலிகை செடிகளும் கணிசமான அளவிற்கு பயிரிடப்படுகிறது. இவர்கள் அறுவடை செய்தவற்றை உடனடியாக உலர்த்தும் வகையில், 'சோலார் டிரையர்' எனும் சூரிய ஒளி உலர்த்தி, மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஒரு சோலார் டிரையரின் விலை, 3.68 லட்சம் ரூபாய். அரசு மானியம் 50 சதவீதம் வழங்குகிறது. மீதம் உள்ள, 1.84 லட்சம் ரூபாயை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு, மூன்று சோலார் டிரையர் வழங்கப்பட உள்ளது. 
ஆர்வம் உள்ள விவசாயிகள், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் செயல்படும், வேளாண் பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை வழங்கலாம். இத்தகவலை, திருவள்ளூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.http://www.dinamalar.com/district_detail.asp?id=1357542

No comments:

Post a Comment