வெள்ளரி, படரும் கொடி வகையை சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா. இங்கிருந்து உலக நாடுகளுக்கெல்லாம் படர்ந்திருக்கிறது. எல்லா நாட்டு மக்களும் உணவுகளில் சேர்க் கும் முக்கிய காய்கறியாக இது இருந்து கொண்டிருக்கிறது.
வெள்ளரிக்காயில் மூன்று வகை உண்டு. ஒன்று: மெல்லிய நீண்ட வகை, இதை தோலுடன் சாப்பிடலாம். இரண்டு: குட்டையான பருத்த வகை. மூன்று: பழத்திற்கானது.
வெள்ளரியில் 90 சதவீதம் நீர் சத்துதான் இருக்கிறது. இது நாவறட்சியை போக்கும். பசியை உண்டாக்கும். உடலுக்கு குளிர்ச்சியை உண்டு பண்ணும். இதில் வைட்டமின் பி, சி,கே மற்றும் கால்சியம், சில்கன், பொட்டாசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
வெள்ளரிக்காயின் சிறப்பு பற்றிய சித்த மருத்துவ பாடல்:
பிஞ்சு வெள்ளிரிக்காய்க்கு பேசு திரிதோடம்போம்
வஞ்சியரே! முற்றிய காய் வாதமுமாய் – நைஞ்சகனி
உண்டாற் சயித்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நிற்றிரங்கும் காண்..!
வெள்ளரி பிஞ்சுவை தோலுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். வெள்ளரி விதையில் அதிக மருத்துவகுணம் இருக்கிறது. சிறுநீர் நோய்களுக்கு அது சிறந்த மருந்து. நீரடைப்பு மற்றும் கல்லடைப்புக்கு செய்யப்படும் மருந்துகளில் வெள்ளரி விதை சேர்க்கப்படுகிறது. உடல் வெப்பமடைந்தால் பித்தம் அதிகரிக்கும். வெள்ளரிக்காய் சாப்பிட்டால் பித்தத்தன்மை சீராகும்.
வெள்ளரிக்காய் வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவைகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியளித்து பித்தத்தை குறைக் கும்.
இதில் நீர்சத்து நிறைந்திருப்பதால் சரும வறட்சியை குறைக்கும். மிருதுத்தன்மையளிக்கும். கரப்பான் போன்ற சரும நோய்களைபோக்கும். கண்களை சுற்றி ஏற்படும் கரு வளையத்தை நீக்க வெள்ளரி துண்டுகளை வெட்டி, கண்களை மூடிக்கொண்டு அதன்மேல் வைக்கவேண்டும். பத்து நிமிடங்கள் வைத்தால் கண்கள் குளிர்ச்சியாகி, கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றை முகத்தில் தேய்த்தால் கருந்திட்டுகள், சூரிய புற ஊதா கதிர்களால் உண்டாகும் பாதிப்புகள் மறையும்.
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடலாம். இது சீறுநீரை அதிகப்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். சீறுநீரக கல் தொந்தரவு கொண்டவர்கள் வெள்ளரிக்காயை உணவில் அதிகம் சேர்க்கலாம். தினமும் வெள்ளரி பிஞ்சை நன்கு மென்று சாப்பிட்டால், வாய் நாற்றம் குறையும். வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா சத்து மூட்டுக் களை சுற்றியுள்ள இணைப்பு திசுக்களை பலப்படுத்தும். கோலாஜன் என்ற இணைப்பு திசுக்களை உருவாக்கும் புரதத்தை மேம் படுத்தும். கால்சியம் தாது எலும்புகளில் சீராக பரவ உதவும். இதன் மூலம் மூட்டுவலி குறையும்.
வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுகிறவர் களுக்கு முடி நன்றாக வளரும். சிலருக்கு வெள்ளரிக்காய் எளிதாக ஜீரணம் ஆகாது. அவர்கள் மிளகுதூள், சீரக தூளை வெள்ளரிக்காயில் கலந்து சாப்பிடவேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளரிக்காயில் தயாராகும் சுவையான உணவுகள்:
தோசை
பச்சரிசி – 250 கிராம் (3 மணிநேரம் தண்ணீரில் ஊறவையுங்கள்)
வெள்ளரிக்காய் – 250 கிராம்
தேங்காய் துருவல்–2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
சீரகம்–1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை–1 கைப்பிடி
உப்பு–தேவைக்கு
நல்லெண்ணெய்–தேவைக்கு
செய்முறை:
1.வெள்ளரிக்காயை தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.
2.தேங்காய் துருவல், மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.
3.வெள்ளரிக்காயை, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து அரையுங்கள். தேவைக்கு சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
4.அரைத்த மாவை, ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொருட்களுடன் சேர்த்து, கலந்து தேவைக்கு உப்பும் கலந்து தோசையாக வார்த்தெடுங்கள்.
இந்த மாவை அரைத்தவுடன் தோசையாக்கி விடலாம். புளிக்கவைக்க வேண் டியதில்லை. சுவையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
இனிப்பு தோசை
பச்சரிசி – 250 கிராம் (3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்)
வெள்ளரிக்காய் –250 கிராம் (துருவி வைத்துக் கொள்ளவும்)
வெல்லம்–100 கிராம் (தூளாக்கவும்)
தேங்காய் –அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
ஏலக்காய்–5
உப்பு–1 சிட்டிகை
நெய்–50 மி.லி.
செய்முறை:
1.வெள்ளரிக்காயை துருவி அதில் உள்ள நீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. பச்சரிசி, தேங்காய் துருவல், ஏலக் காய், வெல்லம் ஆகியவற்றில் வெள்ளரிக்காய் நீர் கலந்து அரையுங்கள். தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு நீர் சேருங்கள். தோசை மாவு பதத்திற்கு அரைக்கவேண்டும். உப்பும் கலந்துகொள்ள வேண்டும்.
3. அந்த மாவில் துருவி வைத்துள்ள வெள்ளரிக்காயை கலந்து நெய் சேர்த்து தோசைகளாக வார்த்துக் கொள்ளவும். இந்த தோசையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இட்லி
வெள்ளரிக்காய் –250 கிராம்
இட்லிக்கான ரவை–250 கிராம்
தேங்காய் துருவல் –3 தேக்கரண்டி
புளித்த தயிர்– 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய்–4 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு –தேவைக்கு
செய்முறை:
1. வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் இட்லி ரவையை கலந்து, தேங்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றி பத்து நிமிடம் வைத்திருங்கள்.
2. இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவைத்து சுவையுங்கள்.
இது சத்தான இட்லி. சர்க்கரை நோயாளிகள் மற்றும் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது.
கொஜ்ஜு
வெள்ளரி பிஞ்சு –250 கிராம்
புளி –சுண்டைக்காய் அளவு
தேங்காய் துருவல்– 4 தேக்கரண்டி
பொட்டு கடலை– 3 தேக்கரண்டி
வெல்லத்தூள்–1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்–2
உப்பு– தேவைக்கு
தாளிக்க:
கடுகு– அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்– 2
நல்லெண்ணெய்–1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி தழை
–1 கைப்பிடி.
செய்முறை:
1. வெள்ளரி பிஞ்சுகளை நறுக்குங்கள்.
2. தேங்காய் துருவல், புளி, பொட்டுக்கடலை, வெல்லம் பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரையுங்கள்.
3. கலவையில் நறுக்கிய வெள்ளரிபிஞ்சை கலந்து, தாளிக்கும் பொருட் களை தாளித்து சேர்த்திடுங்கள்.
4. கொத்தமல்லி தழை கலந்து பத்து நிமிடம் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
இது புளிப்பு, இனிப்பு, லேசான கசப்பு கலந்து காணப்படும். சூடான சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

No comments:
Post a Comment