கரூர்: செம்மறி ஆடுகளை தாக்கும், நீல நாக்கு நோயை கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி, சென்னை கால்நடை பல்கலைக்கழகம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி வட்டாரத்தில், முதல் கட்டமாக, 3,000 டோஸ் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முருகேசன் கூறியதாவது: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் குளிர்காலம் துவங்கி விடும். குளிர்காலத்தில் மாடு, எருமை, ஆடு ஆகிய கால்நடைகளை கோமாரி நோய் தாக்குகிறது. பிக்கோர்னா, எனப்படும் மிகச்சிறிய வைரஸ் நச்சுயிரிகளால் நோய் ஏற்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கடும் காய்ச்சல், வாய், நாக்கு, மடி, காம்பு மற்றும் குளம்புகளுக்கு இடையே கொப்புளங்கள் மற்றும் புண்கள் காணப்படும். கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், பால், சாணம் மற்றும் உபயோகப்படுத்திய தண்ணீர் மற்றும் தீவனதொட்டிகள், தீவனம், காற்று மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நோய் பரவுகின்றன.நோய் தாக்குதலால், கறவை மாடுகளின் பால் உற்பத்தியும், எருதுகளின்வேலைத்திறனும் குறையும். கறவை மாடுகள் சினைப்பிடிப்பது தடைபடும். செம்மறி ஆடுகளுக்கு நீல நாக்கு நோய் பாதிப்பு ஏற்படும். இது ஒரு வகையான கொசுக்களால் ஏற்படுகிறது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தினால், நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ் போன்ற நீராதாரம் வழங்க வேண்டும். தற்போது முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கரு ஆடுகளுக்கு வழங்குவதால், புரதச்சத்து காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மாலை நேரத்தில் புகை மூட்டமிடவதால் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட உள்ளது. நீலநாக்கு நோய் கட்டுப்படுத்த, சென்னை கால்நடைஆராய்ச்சி பல்லைக்கழகம் புதிய நீலநாக்கு நோய் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. முதல்கட்டமாக கரூர் மாவட்டத்தில் பரிதார்த்தமாக பரிசோதனை செய்ய, 3,000 டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அக்., 17 ம் தேதி க.பரமத்தி வட்டாரத்தில் உள்ள செம்மறிஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment