Wednesday, October 14, 2015

சின்ன சின்ன செய்திகள்


உளிக்கலப்பை: உளிக்கலப்பை கொண்டு ஆழ உழவு செய்தல் விளைச்சலை அதிகப்படுத்த அத்தியாவசியமான உத்தி ஆகும். மானாவாரி பயிர்கள் இதனால் அதிக பலனை அடைகின்றன. இப்படி செய்வதால் கடினமான அடிமண் தகர்க்கப்பட்டு, மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையும், நீர் சேமிப்புத்திறனும் அதிகரிக்கின்றன. இவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட நிலத்தின் அடிப்பகுதியில் பயிர்களின் வேர் படர்ந்து வளர உதவுகிறது. எனவே பயிர்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும், விளைச்சலும் அதிகப்படுத்தப்படுகின்றன.
விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல் திறன் கொண்ட உளிக்கலப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள் சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பையை கொண்டு 40 செ.மீ. வரை ஆழ உழவு செய்யலாம். இக்கலப்பையை 35 முதல் 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரால் எளிதாக இயக்கலாம். இந்த உளிக்கலப்பையைக் கொண்டு உழவு செய்தால் எக்டருக்கு ரூ.265 செலவு ஆகும். தகவல்: .சுரேந்திரகுமார், வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சி மையம், .வே..கழகம், கோயம்புத்தூர்-641 003. 
தொலைபேசி: 0422 - 245 7576.

காட்டு கருவேல் மரங்கள்: எந்த நிலத்திலும் வளரும் திறன் படைத்தவை. இதன் விதைகள் கால்நடைகளுக்கு குருணையால் கொடுத்தால் புரதச்சத்து கிடைக்கும். இம்மரங்கள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வளரும் தன்மை படைத்தவை. உரிய முறையில் வெட்டி வளர்த்தால் நல்ல வேலியாக அமையும். மரங்கள் வேரூன்றி விட்டால் அழிப்பது கடினம். இம்மரத்தின் முட்கள் விஷமுள்ளவை. ஆறாத புண்ணை உண்டாக்கும். கரி சுட்டு விற்பனை செய்ய ஏற்றவை. வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் வளரும் திறன் படைத்தவை. இம்மரத்தடியில் புல் பூண்டுகள் வளர்வது கிடையாது. காட்டு கருவேல் மரங்கள் அதிக கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச்சூழலை கெடுக்கின்றன. எனவே இம்மரங்களை ஒழிப்பது நன்மை ஏற்படுத்தும் என ஆய்வு தெரிவிக்கின்றது.
மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. மிகுந்த மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மா விவசாய தி.அங்கமுத்து கூறுகிறார். அதாவது அந்த மரத்தில் ஒரு ரகத்தின் காய்கள் மட்டுமே கிடைத்திடும். இப்போது அந்த மரத்தில் நீங்கள் விரும்பும் 30 மா ரகங்களைக் கூட உருவாக்க முடியும். இதற்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நர்சரி நடத்துபவர்களிடம் நம்முடைய தேவையைச் சொன்னால் மரத்தில் ஒட்டுக்கட்டிக் கொடுப்பார்கள். ஏற்கனவே வளர்ந்துள்ள நீலம், பேங்களூரா மரங்களை வெட்டி அகற்றாமல், அல்போன்சா, பங்கனப்பள்ளி எந்த ரகத்தை வேண்டுமானாலும் அவற்றில் ஒட்டுக்கட்டிக் கொள்ளலாம் என்கிறார் 
மா விவசாயி தி.அங்கமுத்து. தொடர்புக்கு: அலைபேசி : 97515 89280.

சோள தோசை: தேவையான பொருட்கள்: வெள்ளைச்சோளம் 4 கப், முழு கருப்பு உளுந்து 1 கப், வெந்தயம் 1/4 தேக்கரண்டி, வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவைக்கேற்ப, இஞ்சித்துருவல் 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : வெள்ளச்சோளம், கருப்பு உளுந்து இரண்டையும் கழுவி 4 மணி நேரம் ஊற விடவும். வெந்தயம் சேர்த்து ஊற விடவும். பின் இட்லி மாவு அரைப்பது போல் அரைத்து, உப்பு சேர்த்து கலக்கி, 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். தோசை ஊற்று முன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சித்துருவல், கறிவேப்பிலை சேர்த்து கலக்கி மெல்லிய தோசையாக இட்டு பரிமாறவும். எந்த சட்னியுடனும் சாப்பிடலாம். தகவல் : கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், சென்னை.
-
 டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments:

Post a Comment