Thursday, October 1, 2015

குறைந்த விலை பருப்பு சிறப்பு திட்டம் நீட்டிப்பு


சென்னை : ரேஷன் கடைகளில் குறைந்த விலையில், பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். வெளிச்சந்தையில், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகமாக உள்ளது. எனவே, முதல்வர் உத்தரவின் பேரில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை, கிலோ, 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொது வினியோக திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை, 2015 செப்., 30ம் தேதி வரை வழங்க, கடந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.இப்போதும், வெளிச்சந்தையில், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி, சிறப்பு பொது வினியோக திட்டத்தை, மேலும் ஓராண்டுக்கு அதாவது, 2016 செப்., 30ம் தேதி வரை நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.இந்த திட்டத்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய், கூடுதலாக செலவாகும்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1354257

No comments:

Post a Comment