Monday, October 12, 2015

சம்பா பருவ நெல் விதை கிலோவுக்கு ரூ.10 மானியம்



திருக்காட்டுப்பள்ளி, : பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விநியோகம் செய்யப்படும் அனைத்துரக நெல் விதைகளுக்கும் கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியம் வழங்கப்படுகிறதுதஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கு தேவையான விதைநெல் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் சொர்ணா சப்1. ஆடுதுறை 46, ஆடுதுறை 49, கோ(ஆர்) 50 ஆகிய நெல் ரகங்கள் கிலோவுக்கு ரூ.10 மானியத்தில் வழங்கப்படுகிறது. இதர ரகங்களான கோ 43, ஆடுதுறை 39 ஆகிய நெல்விதைகள் விதை கிராம திட்டத்தில் கிலோவுக்கு ரூ.10 மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் பரிந்துரை பெற்று பூதலூர், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, அகரப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இதனை பெற்று பயனடையலாம். இவ்வாறு வேளாண்மை அதிகாரி பிரபாகர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment