Monday, October 12, 2015

கனமழையால் குண்டேரிபள்ளம் அணை மீண்டும் நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


 டி,என்.பாளையம், அக். 12–
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அனைத்து பகுதிகளிலும் இடிமின்னலுடன் கனமழை பெய்தது.
வனப்பகுதிகளான சத்தியமங்லம், ஆசனூர், தாளவாடி, அந்தியூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.
இந்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடம்பூர் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அதன் அடிவாரத்தில் உள்ள குண்டேரி பள்ளம் அணை மீண்டும் நிரம்பியது.
மேலும் கோபி, டி.என். பாளையம் பகுதியிலும் குண்டேரி பள்ளம் அணை பகுதியிலும் பலத்த மழை பெய்ததையொட்டி குண்டேரி பள்ளம் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 898 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் குண்டேரி பள்ளம் அணைபகுதியை யொட்டி உள்ள கொங்கர் பாளையம், கவுண்டம் பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு ஆகிய கரையோர கிராம மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் எந்த நேரத்திலும் தண்ணீர் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.



http://www.maalaimalar.com/2015/10/12102350/kunderipallam-dam-full-again-b.html

No comments:

Post a Comment