Thursday, June 9, 2016

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனையகம் தொடக்கம்

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனையகம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரகங்கள் வெளியிடப்படுகின்றன. இதனை விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் உபயோகித்து பயன்பெறுவதற்காக திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் நெல்லில்- டிகேஎம் -13,டிஆர்ஒய்- 3, உளுந்தில் எம்டிவி-1, பச்சை பயிறில் சிஒ-8 போன்ற புதிய ரகங்களை விதை உற்பத்தி செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
 மேலும், வேளாண்மை அறிவியல் நிலையம் வேளாண்மை குறித்த பல்வேறு பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உயர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நோய் எதிர்ப்பு கொல்லிகளான டிரைகோடெரிமா விரிடி, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் மற்றும் பயிர் ஊக்கிகளான பயிர் வொண்டர், நிலக்கடலை ரிச், மக்காச்சோளம் மேக்சிம், கரும்பு பூஸ்டர், தென்னை டானிக் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்துள்ளது.
 மேலும் நெல், கரும்பு, சிறு தானியங்தளுக்கான நுண்ணூட்ட கலவையும் கிடைக்கும்.  ஒவ்வொரு ஆண்டும் இங்கு தொழில் முனைவோருக்கு காளாண் உற்பத்தி, மண்புழு உற்பத்தி, புறக்கடை கோழி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான மூலப்பொருள்களான காளாண் வித்து, மண்புழு போன்றவை இவ்விற்பனையகம் மூலம் பெறலாம்.  மேலும், வேளாண் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் இங்கு கிடைக்கும்.

source : Dinamani

No comments:

Post a Comment