நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2016-17ம் ஆண்டு நெல் இயக்க திட்டத்தின் கீழ், பல்வேறு இனங்களில் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுகுறித்து சேந்தமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2016-17ம் ஆண்டு நெல் இயக்க திட்டம் சேந்தமங்கலம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட நெல் ரகங்களை கொண்டு விதை பண்ணை அமைத்து வேளாண்மை துறைக்கு விதை நெல் வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ ரூ.8 என்ற அளவில் நடப்பாண்டில் மானியம் வழங்கப்பட உள்ளது.
10 ஆண்டுக்கு உட்பட்டு நெல் ரகங்களை கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நெல் வாங்கும் போது கிலோ ரூ.10க்கு மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. நெல்நடவு இயந்திரம் மூலம் மேற்கொள்ள நாற்று விட உரிய டிரே 50 சதவீத மானியத்தில் ஒரு தட்டிற்கு அதிகப்படியாக ரூ.40 மானியம் வழங்கப்படும். பவர் டிரில்லர் 8 எச்பி.,க்கு மேல் உள்ள இயந்திரம் வாங்கும் விவசாயிக்கு (சிறு குறு மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர்) ரூ.75 ஆயிரம் அல்லது 50 சதவீதம் வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் அல்லது ரூ.60 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்
ளார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment