தேவையான பணத்தை, ஏ.டி.எம்., இயந்திரத்தில் எடுப்பது போல, விரும்பிய சைவ, அசைவ உணவை குறிப்பிட்டால், உணவு பொட்டலம் கிடைக்கும் இயந்திரம், சென்னை வாசிகளிடையே பிரபலமாகி வருகிறது.உணவு துறையில், இந்த புதிய இயந்திரத்தை கண்டுபிடித்து, சந்தைக்கு கொண்டு வந்திருப்பவர், கோவையை சேர்ந்த, சதீஷ் சாமி வேலுமணி. இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டதும் கோவையில் தான்.
ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வரவு - செலவு செய்து வரும் இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்; ராமாவரம், டி.எல்.எப்., - ஐ.டி., பூங்கா; தி.நகர், சென்னை சில்க்ஸ் வளாகம் ஆகிய இடங்களில், 10 மாதங்களுக்கு முன் இந்த இயந்திரத்தை வைத்துள்ளார்.
காலையில், இட்லி, இனிப்பு, வடை - பொங்கல், இனிப்பு, வடை - சப்பாத்தி, குருமா, இனிப்பு - நுாடுல்ஸ்; மதியத்தில், மினி மீல்ஸ் - பிரியாணி, சிக்கன் 65; இரவு நேரங்களில் டிபன் என, 224 வகையான உணவுகளை இந்த இயந்திரம் மூலம் பெறலாம்.
இந்த உணவு அரங்குக்குள் நுழைந்ததும், இரண்டு ஏ.டி.எம்., இயந்திரங்கள் வரவேற்கும். அதன் திரையில் சைவ, அசைவ உணவு வகைகள், அவற்றின் விலையுடன் தெரியும். எந்த உணவு வேண்டுமோ அதை தேர்வு செய்து, 'டெபிட் கார்டு' அல்லது 'கிரெடிட் கார்டை' இயந்திரத்துக்குள் செலுத்தி பணம் செலுத்த வேண்டும்.
அதற்கான, பில் கைக்கு வரும். இதன்பின், ஏ.டி.எம்., இயந்திரத்துக்கு பின் உள்ள, மற்றொரு இயந்திர கவுன்டருக்கு சென்றால், தேர்வு செய்த உணவு பாக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான நேரம், 90 வினாடிகள் மட்டுமே.
இது தான் உணவு பாக்கெட் பெற, வாடிக்கையாளர் செய்ய வேண்டியது. உணவு பாக்கெட்டை பெற்றதும், அரங்கில் உள்ள மேஜையில் அமர்ந்து உட்கொள்ளலாம்.
'அட்சயம்' என்ற கம்பெனி மூலம், 'புட் பாக்ஸ்' என்ற வணிகப் பெயருடன், இப்புதிய முறையை அறிமுகம் செய்துள்ள, அந்த நிறுவனத்தின் தலைவர் சதீஷ் சாமி வேலுமணி கூறியதாவது:
அனைத்துத் துறைகளிலும் புதிய புதிய உத்திகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, டிஜிட்டல் உலகில் புதிய வரவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பத்திரிகை, குளிர் பானங்கள் போன்றவற்றை இயந்திரம் மூலம் வழங்கும்போது, உணவை வழங்க முடியாதா என மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.எங்கள் நிறுவனம், உணவை உற்பத்தி செய்வதில்லை. பிரபல உணவு நிறுவனங்களின் உணவுகளை சந்தையிடுவது தான் எங்கள் வேலை. அதை,
இயந்திரம் மூலம் சந்தையிடுகிறோம்.கணினி மென்பொருளை கொண்டு, இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளோம். அடையாறு ஆனந்த பவன், அஞ்சப்பர், டில்லி ஹைவே, ஹைதராபாத் ரமாஸ், நுாடுல்ஸ் கிங் போன்ற உணவு தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
காலை, மதியம், இரவு வேளைகளுக்கு தேவையான உணவை இந்நிறுவனங்களுக்கு, ஆர்டர் தருகிறோம். அவற்றை, பாக்கெட்களில் அடைக்க தேவையான பொருட்களையும் அளித்து விடுகிறோம். எங்கள் ஆர்டருக்கு ஏற்ப, உணவு பாக்கெட்டில் அடைத்துத் தருகின்றனர். இவற்றை, உணவு வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் வைத்து விடுவோம்.
ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பது போல், தேவையான உணவை தேர்வு செய்தால், உணவு பாக்கெட் கைக்கு வந்துவிடும். உணவகங்களுக்கு நேரில் சென்று சாப்பிடும்போது, எவ்வளவு செலவு ஆகிறதோ, அதே செலவு தான், இயந்திரம் மூலம் பெறும் உணவு பாக்கெட்டுக்கான விலை. அதே சுவையோடு, தரத்துடன் உணவு இருக்கும். உணவு வழங்கும் நிறுவனங்களின் வணிக குறியீடும், உணவு பாக்கெட் மீது இருக்கும்.
சென்னையில் உள்ள, எங்களின் மூன்று கிளைகள் மூலம் தினமும், 3,000 பேர் சாப்பிடுகின்றனர். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, ஆறு மணி நேரத்துக்குள், பயன்படுத்தாத உணவை விற்பதில்லை. இயந்திரமும் இந்த உணவு பாக்கெட்டுகளை தராது.இவ்வாறு அவர் கூறினார்.
காப்புரிமை
மேலும் அவர் கூறியதாவது: உணவு வழங்கும் இயந்திரம், உலகில் வேறு எங்கும் இல்லை. எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, நாட்டின் பிரதான நகரங்களில் துவங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாடுகளில் இருந்தும், அழைப்புகள் வருகின்றன.
முழுக்க முழுக்க எங்கள் கண்டுபிடிப்பு என்பதால், இந்த இயந்திரத்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளோம். புதிய கண்டுபிடிப்பு சந்தைக்கு வந்து, 18 மாதம் ஆன பின், காப்புரிமை வழங்கப்படும். எங்கள் இயந்திரத்தின் முதற்கட்ட ஆய்வு முடிந்து விட்டது; விரைவில், காப்புரிமை கிடைக்கும்.
இவ்வாறு சதீஷ் சாமி வேலுமணி கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:
Post a Comment