Tuesday, October 6, 2015

வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெறலாம்: ஆட்சியர் தகவல்


வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி:
 ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை தமிழக அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. வேளாண் இயந்திரமயமாக்குதல் உபஇயக்கத்தின் மூலமாக 2015-16--ஆம் ஆண்டில் உழுவை இயந்திரம், பவர் டில்லர், ரொட்டாவேட்டர் மற்றும் பல்வகை கதிரடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான விவசாய இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்பட உள்ளன.
  ஈரோடு வருவாய்க் கோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, 73-ஜெயபாரதி மஞ்சள் கிடங்கு, மஞ்சள் வளாகம், நசியனூர் சாலை, நசியனூர் அஞ்சல், செம்பாம்பாளையம், ஈரோடு-638107, தொலைபேசி எண் 0424-2555011 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
 கோபி வருவாய்க் கோட்ட விவசாயிகள்உதவி செயற்பொறியாளர் (வே.பொ), 31-, தெற்கு பூங்கா வீதி, கோபி, தொலைபேசி எண் 04285 - 229159 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
 மேலும், கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட நிலை அலுவலகமான செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறைஎச்-32, பெரியார் நகர்,
ஈரோடு-638 009, தொலைபேசி எண் 0424-2262067 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.


http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/10/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/article3067428.ece

No comments:

Post a Comment