Monday, October 12, 2015

இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு அரசு மான்யம்


 
செஞ்சி: இயந்திர நடவு செய்யும் விசாயிகளுக்கு அரசு மான்யம் வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.வல்லம் வட்டாரத்தில் தற்போது சம்பா பருவத்திற்கான நாற்றங்கால் விடும் பணி நடந்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஏடிட்டி 37, ஏடிட்டி 39 நெல் ரகங்கள் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இயந்திரம் மூலமாக நெல் நடவு செய்யும் விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆயிரத்து 200 ரூபாய் மானியமாக வேளாண்மைத்துறை மூலம் அரசு வழங்க உள்ளது. வல்லம் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளனர். விவசாயிகளுக்கான மான்ய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீது, அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், நடவு செய்தபோது எடுத்த தேதியுடன் கூடிய புகைப்படம், ஆதார் அட்டை நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வல்லம் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment