ராமநாதபுரம்,: வனஉயிரின வாரவிழாவையொட்டி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரத்தில் மெகா கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சி துவங்கியது.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் மீன்கள் உட்பட 3,600 கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் 54 உயிரினங்கள் அரிய வகை. வனஉயிரின வாரவிழாவையொட்டி கடல்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் முகமதுசதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மெகா கண்காட்சி நேற்று துவங்கியது. கலெக்டர் நந்தகுமார் துவக்கி வைத்தார். மயில்வாகனன் எஸ்.பி., அறக்கட்டளை இயக்குனர் டாங்கே, சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் சாகுல்அமீது பங்கேற்றனர்.
இதில் கடல் பசு, ஆவுலியா, அலுங்காமை, ஓங்கிகள், பெருந்தலை ஆமை, பால் சுறா, கங்கை சுறா, வேளாமீன், வெள்ளசுறா, சவுக்கு திருக்கை, கடல் அட்டைகள், கடல் பஞ்சு போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் மற்றும் யானைக்கை, வாழைப்பூ சங்கு, தவளை சங்கு, பெரிய மட்டி, செம்பட சோவி, பழுப்பு புள்ளி சோவி, மூவரி சோவி, வரி சங்கு, குதிரை முள்ளி உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. மேலும் 30 க்கும் மேற்பட்ட கடல்நீர் தொட்டிகளில் வகை, வகையான உயிருள்ள மீன்கள் பார்ப்போரை சுண்டியிழுக்கும் வகையில் இருந்தன. இந்த கண்காட்சி நாளை வரை நடக்கிறது.

No comments:
Post a Comment