கம்பம்:கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டுள்ள திராட்சையில் செவட்டை நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என திராட்சை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
கம்பம் ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சிநிலைய பேராசிரியர் பார்த்திபன், உதவி பேராசிரியர் சுப்பையா கூறியதாவது:
கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டுள்ள திராட்சையில் செவட்டை நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க புதிதாக கவாத்து அடித்த தோட்டங்களில் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும் தண்டுகளில் செவட்டை நோய் பரப்பும் பூஞ்சான்கள் இருக்கும். அவற்றை எடுத்து விட வேண்டும். அடிஇலைகளை எடுத்து நன்கு காற்றோட்டம் இருக்குமாறு செய்ய வேண்டும். அத்தோடு கர்சேட் 1.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருடன் அல்லது மெட்டாலாசில் மேங்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருடன் அல்லது அசாக்ரி ஸ்டோடி 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
செவட்டை நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில் விவசாயிகள் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என்றும் கூறியுள்ளனர். http://www.dinamalar.com/district_detail.asp?id=1359572
No comments:
Post a Comment