தேனி, : தமிழகத்திலேயே முதன்முறையாக சொட்டுநீர் பாசன கரும்பு விவசாயிகளுக்கு நிதிக்கல்வி பயிற்சி முகாம் தேனியில் நேற்று நடந்தது. வைகை அணை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையுடன் சாலிசாரிடாட் தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு குழுமம் இணைந்து இந்திய கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் ஆதரவு திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன கரும்பு விவசாயிகளுக்கான நிதிக் கல்வி பயிற்சி முகாம் தேனியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களை ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சர்க்கரை ஆலை கரும்பு விரிவாக்க முதுநிலை இணை பொதுமேலாளர் கதிரவன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சர்க்கரை ஆலை பொதுமேலாளர் சதாசிவம் பேசும்போது, ’இத்திட்டத்தின் மூலம் ஆயிரம் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன நிதிக்கல்வி அறிவு பயிற்சி 1 மாதத்திற்கும் மேலாக நடக்க உள்ளது. மேலும், இதன்மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க செயல்திட்ட வழிமுறைகள் கிடைக்கும்’ என்றார். இதில் சர்க்கரை ஆலையின் நிதி ஆலோசகர் ராமச்சந்திரன், விவசாயிகளுக்கு நிதிமேம்பாடு, வரவு-செலவு பராமரித்தல், குறுகிய மற்றும் நீண்டகால கடன் பெறுதல், இதன் வட்டிவிகிதாச்சரங்கள் குறித்து பேசினார்.
இப்பயிற்சி முகாமில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து முன்னோடி கரும்பு விவசாயிகளான சரவணராஜா, சுபாஷ், ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சொட்டு நீர் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திறன்மேம்பாட்டு கழக இணை மேலாளர் அபினாஷ், சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள் வெற்றிவேல், செந்தில்குமரன் செய்தனர்.
No comments:
Post a Comment