Thursday, October 8, 2015

வேளாண் துறைக்காக தனி "வாட்ஸ்ஆப்'குழு உருவாக்கி தகவல்களை பகிருங்கள்: கலெக்டர் அறிவுரை


தேனி:தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில், வேளாண் துறை, தோட்டக்கலை துறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் கலெக்டர் பேசுகையில், "வேளாண் உதவி அலுவலர்கள் வாரத்தில் 4 நாட்கள் கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். பயிர் சாகுபடி குறித்து இணை அடங்கல் பராமரித்து, சாகுபடி பயிர் விபரம், விவசாயிகளின் அலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும்.

பெரியாறு பாசன பகுதியில் 2 ம் போக சாகுபடிக்கு குறுகிய கால ரகங்களை தேர்வு செய்து நாற்றாங்கால் தயாரிக்க வேண்டும். இயந்திர நடவு மேற்கொள்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்திட வேண்டும். சாகுபடி காலங்களில் உரம், பூச்சி மருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்களில் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

றுவை சாகுபடிக்கு வட்டாரம் வாரியாக தண்ணீர் தேவை கேட்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளண் துறைக்கென "வாட்ஸ் ஆப்' குழு அமைத்து அதில் வேளாண் உதவி அலுவலர் முதல் இணை இயக்குனர் வரை அனைவரையும் இணைத்து செய்திகளை பகிர்ந்து அதன்படி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் இணை இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கநாதன், துணை இயக்குனர்கள் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment