தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அக். 12-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
வரும் அக். 12-ஆம் தேதியன்று வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் 120 மி.மீ. மழையும் செஞ்சியில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அரக்கோணத்தில் 70 மி.மீ. மழையும், குடவாசலில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதேபோல, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், காவேரிப்பாக்கம், பூந்தமல்லி, பூண்டி (50 மி.மீ.), பள்ளிப்பட்டு, மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், திருச்சி, திருவள்ளூர், திருத்தணி (40 மி.மீ.), காஞ்சிபுரம், விராலிமலை, தாமரைப்பாக்கம் (30 மி.மீ.), சென்னை, துறையூர், நாகர்கோவில், புழல், குழித்துறை, வந்தவாசி, தேவாலா, கன்னியாகுமரி (20 மி.மீ.), கேளம்பாக்கம், சோழவரம், கீரனூர், மேட்டூர், செங்கல்பட்டு, வால்பாறை, திருப்பத்தூர், இரணியல், பெரம்பலூர் (10 மி.மீ.) உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
http://www.dinamani.com/tamilnadu/2015/10/09/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3070729.ece
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அக். 12-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
வரும் அக். 12-ஆம் தேதியன்று வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் 120 மி.மீ. மழையும் செஞ்சியில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அரக்கோணத்தில் 70 மி.மீ. மழையும், குடவாசலில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதேபோல, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், காவேரிப்பாக்கம், பூந்தமல்லி, பூண்டி (50 மி.மீ.), பள்ளிப்பட்டு, மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், திருச்சி, திருவள்ளூர், திருத்தணி (40 மி.மீ.), காஞ்சிபுரம், விராலிமலை, தாமரைப்பாக்கம் (30 மி.மீ.), சென்னை, துறையூர், நாகர்கோவில், புழல், குழித்துறை, வந்தவாசி, தேவாலா, கன்னியாகுமரி (20 மி.மீ.), கேளம்பாக்கம், சோழவரம், கீரனூர், மேட்டூர், செங்கல்பட்டு, வால்பாறை, திருப்பத்தூர், இரணியல், பெரம்பலூர் (10 மி.மீ.) உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment